வாட்ஸ் ஆப் குழுவால் ஊர்காவல் படையினருக்கு மகிழ்ச்சி.!

மாவட்டத்தில் உள்ள அரசு துறை அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும்  தொழிலதிபர்கள் 'நம்ம கோவை' என்ற வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்துள்ளனர். இந்த குழு கடந்த 2014ம் ஆண்டு கிஷோர் என்ற சமூக ஆர்வலரால் தொடங்கப்பட்டது. அன்றாடம் கோவையில் நடக்கும் செய்திகள் குறித்தும், கோவையின் வளர்ச்சிக்கான பணிகள் குறித்தும் இக்குழுவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில், ஊர்காவல் படையினருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது தொடர்பான கேள்விகள் எழுந்தது. தொடர்ந்தது, அக்குழுவில் உறுப்பினராக இருந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் 14 தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள், ஊர்காவல் படையினருக்கு தேவையான ரெயின் கோர்ட், பாதுகாப்பு உடைகள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை வழங்க முன்வந்தனர்.



இதைத்தொடர்ந்து, இன்று காலை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ஊர்க்காவல் படையினருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட காவல் கண்காணிப்பாளர் ரம்யா பாரதி, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து ரம்யா பாரதி பேசியதாவது:-

தமிழகத்தில் உள்ள ஊர்க்காவல் படையினரில் கோவையை சேர்ந்த ஊர்க்காவல் படையினர் சிறப்பாக பணியாற்றிவருகின்றனர். ஒரு வாட்ஸ் ஆப் குழு-வின் மூலம் காவலர்களுக்கு தேவையான உபகரணங்கள் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதிகாரிகளின் ஆய்வுகளுக்கு பயந்து காவலர்கள் பலர் தங்கள் பாதுகாப்பு உடைகளை புதிதாக வைத்திருக்க எண்ணுகின்றனர். பாதுகாப்பு உடை என்பது நமக்கு மிகவும் முக்கியமான ஒன்று. இரவு நேரங்களில் தொலைவில் வரும் வாகனங்களுக்கு காவலர்களின் காக்கி உடை கண்ணுக்கு புலப்படாது. அதனால் தான் மின்னும் வகையில் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கப்படுகின்றன. தற்போது, வழங்கப்பட்டிருக்கும் இந்த உபகரணங்களை ஊர்காவல் படையினர் கட்டாயமாக உபயோகிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.





Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...