சைக்கிள சும்மா நிறுத்தாதீங்க..! உடனே கால்பண்ணுங்க ரேடியோ சிட்டிக்கு...

பெரும்பாலான மக்கள் தங்களின் தேவைக்காக வாங்கப்பட்ட சைக்கிளை ஒருக்கட்டத்தில் பயன்படுத்த முடியாமல் வீட்டிலேயே வைத்து விடுவது வழக்கம். அவ்வாறாக தேக்கப்பட்ட சைக்கிள் நீண்ட நாட்களுக்குப்பின் பயன்படுத்தவே முடியாத நிலைமைக்கு வந்து விடுகின்றது.



இவ்வாறாக பயனற்று கிடக்கும் சைக்கிளை அதனை வாங்க முடியாமல் இருக்கும் மக்களுக்கு குடுத்து உதவும் வகையில் ரேடியோ சிட்டி வானொலி நிறுவனம் ஒரு திட்டதை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பயனற்று கிடக்கும் சைக்கிள் குறித்து அதன் உரிமையாளர் தெரியப்படுத்தினால் அவரின் வீட்டுக்கே சென்று அந்த சைக்கிளை கைப்பற்றி இல்லாதவர்க்கு கொடுக்கப்படும்.

இந்த திட்டத்தினை கடந்த மாதம் கோவை மாநகராட்சி மேயர் விஜய கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

பயனற்று உள்ள சைக்கிளை மீட்டு இல்லாதவர்களுக்கு குடுத்து உதவும் வகையில் ரேடியோ சிட்டி 91.1 வானொலி நிறுவனத்தின் சார்பில் ''ரீசைக்கிள்'' என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்களின் பயனற்றுள்ள சைக்கிள் குறித்து தெரியப்படுத்தினால் அவர்களின் வீட்டுக்கே சென்று அந்த சைக்கிளை கைப்பற்றி சீரமைக்கப்பட்டு பின் அதன் பயன்பாடு உள்ள ஏழை மக்களுக்கு வழங்கப்படும். இவ்வாறாக கடந்த தினங்களில் கோவை உக்கடம், கரும்புக்கடை உள்ளிட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது.



மேலும் இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தங்களின் பயனற்றுள்ள சைக்கிளை கொடுக்க +91 422 663 9911 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.







Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...