அரியானாவில் முதன்முறையாக திறந்தவெளி சிறைச்சாலை அமைக்க முடிவு

அம்பாலா: அரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜ அரசு ஆட்சி செய்து வருகிறது. இங்கு பல்வேறு திட்டங்களை  அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு கட்டமாக அம்பாலாவில் முதன்முறையாக கைதிகளுக்கான திறந்த வெளி சிறைச்சாலை அமைக்கப்படுகிறது.  இதன் மூலம் கைதிகள் திறந்த வெளியில் சுதந்திரமாக உலாவ முடியும். இதுகுறித்து சிறைத்துறை அதிகாரி யஷ்பால் சிங்கால் கூறுகையில், அரியானா  மாநிலத்திலேயே முதன்முறையாக இப்போதுதான் அம்பாலாவில் திறந்த வெளி சிறைச்சாலை அமைக்க திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது அரியானாவில் அமைய இருக்கும் திறந்த வெளி சிறைச்சாலையானது மற்ற மாநிலங்களில் அமைந்துள்ள திறந்த வெளி சிறைச்சாலையை விட  மேம்பட்டதாக இருக்கும். இங்கு குறைந்த அளவே சிறை பாதுகாவலர்கள் ஈடுபடுவர். நன்னடத்தை கொண்ட கைதிகள் மட்டுமே இங்கு அடைக்கப்பட  உள்ளனர். எனவே இங்குள்ள கைதிகள் மற்ற கைதிகளை விட சற்று சுதந்திரமாக வெற்று வெளியில் உலாவும் வைகையில் அமைக்கப்பட உள்ளது என்றார்.

மேலும் அரியானா சிறைச்சாலைகில் கைதிகள் மத்தியில் பெருகி வரும் செல்போன் பயன்பாட்டை தடுக்கும் வகையில் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டு  வருகிறது. சோனிபட் மற்றும் ரோட்டக் ஆகிய சிறைச்சாலைகளில் ஜாமர் கருவிகள் பொருத்தும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான  பணியை தனியார் நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று மேலும் அவர் கூறினார்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...