தமிழகத்தில் 3 தொகுதிகளுக்கு நவம்பர் 19-ல் இடைத் தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் நவம்பர் மாதம் 19-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 22-ம் தேதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதிக்கும் நவம்பர் 19-ல் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 4 தொகுதிகளுக்குமான வேட்பு மனுத்தாக்கல் அக்டோபர் 26-ம் தேதி துவங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய நவம்பர் 2-ம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நவம்பர் 3-ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுவை திரும்ப பெற நவம்பர் 5-ம் தேதி கடைசி நாளாகும்.

முன்னதாக கடந்த மே மாதம் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற போது பணம் விநியோகம் செய்யப்பட்டதாக எழுந்த கடும் புகாரையடுத்து, தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் நடைபெற இருந்த தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்தது. மற்றொரு தொகுதியான திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் சீனிவேலு தேர்தல் முடிவுகள் வெளியான பின் உடல்நலக் குறைவால் காலமானார்.

இதனையடுத்து மேற்கண்ட 3 தொகுதிகளுக்கும் வரும் நவம்பர் மாதம் 19-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரி மாநிலத்தில் நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் ராஜினாமா செய்ததால் அங்கும் இடைத்தேர்தல் நவம்பர் மாதம் 19-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...