மீண்டும் விழுந்த காட்டு யானை- ஏமாற்றத்தில் வனத்துறை

கோவையை அடுத்த பெரிய தடாகம் வனப்பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை ஒன்று உடல்நலக் கோளாறு காரணமாக கீழே விழுந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை மருத்துவர் மனோகரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். மேலும் பொக்லைன் உதவியுடன் அந்த யானையை தூக்கி நிறுத்த மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்காததால், சாடிவயல் யானைகள் முகாமில் இருந்து கும்கி யானை பாரி வரவழைக்கப்பட்டு காட்டு யானையை தூக்க முயற்சி மேற்கொண்டனர். 



அப்போது யானை படுத்திருக்கும் பகுதிக்கு அருகாமையில் 4 யானைகள் கொண்ட கூட்டம் வந்ததால் சிகிச்சை அளிக்கும் பணிகள் ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரண்டாவது நாளாக மருத்துவக் குழுவினர் யானைக்கு தண்ணீரும், பழங்களும் வழங்கி சிகிச்சை மேற்கொண்டனர். 

இதில், யானையில் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, வியாழனன்று இரவு பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் யானையை நிற்க வைக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் எழுந்து நின்ற யானை, வனத்துறையினர் வைத்த தண்ணீரை குடித்துவிட்டு காட்டுப் பகுதிக்குள் நடந்து சென்றது.

இந்நிலையில், மீண்டும் வெள்ளியன்று அந்த பெண் காட்டு யானை அப்பகுதியிலேயே படுத்துக்கொண்டு இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்ற வனத்துறை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து அந்த யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கோவையில், கடந்த சில நாட்களாக யானைகள் தொடர்ந்து உயிரிழந்து வரும் நிலையில், இச்சம்பவம் கால்நடை ஆர்வலர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...