ஆட்சியர் தலைமையில் ஆதிதிராவிடர் நலக்குழுக் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று (இன்று) ஆதிதிராவிடர் நலக்குழுக் கூட்டம் நடைபெற்றது. தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தின் முதுநிலை கண்காணிப்பாளர் லிஸ்டர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பேசியதாவது:-

''கோவை மாநகராட்சியின் சார்பில் ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதியத்தினை அவர்களது வங்கிக் கணக்கு மூலம் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, மருத்துவ நிதி உள்ளிட்ட காப்பீடு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், தூய்மை தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவ முகாம்களும் அதிகளவில் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும், பணிகளில் தொழிலாளர்களை பயன்படுத்துவோர், தொழிலாளர் நலனுக்கு எதிராக சிறுவர்களை பணியமர்த்தவோ, கொத்தடிமைகளாக வைத்திருப்பதோ சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு செயல்படுபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என மாவட்ட ஆட்சியர் பேசினார்.



இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கிருஷ்துராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மோகன், ஆதிதிராவிடர் நலக் குழு உறுப்பினர் செல்வக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...