விவசாய நிலத்தில் குவிந்துகிடந்த உயிரினங்கள்- விசாரணை



கோவை மாவட்டம், துடியலூர் வட்டத்திற்கு உட்பட்டது பன்னிமடை பஞ்சாயத்து. இப்பகுதியில் ராஜகோபால் என்பவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக அந்த விவசாய நிலத்தில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியினர் கூறிவந்துள்ளனர். இந்நிலையில், செவ்வாயன்று கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது.

அப்போது விவசாய நிலத்தில் சோதனையிட்டபோது, அங்கிருந்த ஒரு குழியில் பாம்பு மற்றும் மயில்கள் இறந்துகிடப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வனத்துறையினர் சம்பவ இடத்தில் சோதனையிட்டனர்.

இதில், அந்தக் குழியில் 2 பாம்புகள், 2 காடைகள், 1 காகம், 10 மயில்கள் இறந்துகிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவை இறந்து நீண்ட நாட்கள் ஆனதால் சேதமடைத்து துர்நாற்றம் வீசியுள்ளது.

இதனிடையே, ஒரே குழியில் 10 மயில் உட்பட பல உயிரினங்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் விவசாய நில உரிமையாளர் ராஜகோபாலிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...