போனஸ் வழங்க மறுக்கும் தனியார் நிறுவனம்- தொழிலாளர்கள் ஏமாற்றம்

கோவை மாவட்டம், அன்னூரை அடுத்த அச்சம்பாளையத்தில் பிஷ்மா புட் புராடக்ட் என்கிற தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பாக்கு வகையான மூலப்பொருட்கள் இந்தியாவில் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

இந்நிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வரும்நிலையில், கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒருமாத சம்பளம் மற்றும் அன்பளிப்புத் தொகை வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தீபாவளி நெருங்கிவிட்ட நிலையிலும் தற்போது வரை போனஸ் தொகை குறித்த பேச்சுவார்த்தையை பிஷ்மா நிறுவனம் தொடங்கவில்லை. 

இதனையடுத்து சிஐடியு பொதுத்தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பாலசுந்தரம் சாலையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டு முறையீடு செய்தனர். இதன் பின் நிர்வாகத் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைத்த தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், முத்தரப்பு பேச்சுவார்தையில் ஈடுபட்ட நிலையிலும் நிர்வாகத்தரப்பினர் போனஸ் தரமுடியாது என்பதில் உறுதியாக இருந்தனர். 

இதுகுறித்து பேச்சுவார்த்தையில் பங்கேற்ற சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கே.மனோகரன், ஏ.எல்.ராஜா, டி.வி.ரமணி ஆகியோர் கூறுகையில், ''கடந்த எட்டு வருடங்களுக்கும் மேலாக பணியாற்றும் இத்தொழிலாளர்களுக்கு நியாயமாக தரவேண்டிய கொடுபடாத சம்பளம் (போனஸ்) தரமுடியாது என பிஷ்மா நிறுவனம் தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறது. ஆண்டு முழுவதும் தொழிலாளர்களின் உழைப்பைப் பயன்படுத்தி அதிகமான லாபத்தை ஈட்டியும் தொழிலாளர்களை வஞ்சிக்கும் பிஷ்மா நிறுவனத்தின் நடவடிக்கையை ஏற்க முடியாது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் சிஐடியு தலைமையில் தீவிரமான போராட்ட நடவடிக்கையில் ஈடுபட உள்ளோம்'' என தெரிவித்தனர். 

தீபாவளி பண்டிகைக்கு ஓரிரு நாட்களே உள்ள நிலையில் புது துணிகள் கூட வாங்குவதற்கு வழியில்லாமல் தொழிலாளர் நலத்துறை அலுவலக வாயிலில் அப்பாவிகளாய் நூற்றுக்கணக்கான பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் அமர்ந்திருந்தது அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Newsletter

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...