கட்டிட கழிவுகளை அகற்ற உதவி சேவை மையத்தை '8190000400' மாநகராட்சி ஆணையர் துவக்கி வைத்தார்!


கோவை மாநகராட்சியில் கட்டிட கழிவுகளை அகற்றுவதற்கான உதவி சேவை மையத்தையும், அதற்கு பயன்படுத்தக்கூடிய கட்டிட கழிவுகளை அகற்றும் வாகனங்களையும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் துவக்கி வைத்தார்.

இதுகுறித்து, க.விஜயகார்த்திகேயன் தெரிவிக்கையில், ''தமிழக முதல்வர் 110 விதியின் கீழ் அறிவித்த சிறப்பு திட்டங்களில் ஒன்றான கட்டிட கழிவுகளை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தும் திட்டம் இதுவாகும். இதனை செயல்படுத்தும் விதமாக கோவை மாநகராட்சியில் கட்டிட கழிவுகளை அகற்றுவதற்கான உதவி சேவை மையம் 8190000400 என்ற தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கட்டிட கழிவுகளை அகற்றும் பணிகளில் 3 வாகனங்கள் துவங்கி வைக்கப்பட்டது.

குறிப்பாக பொதுமக்கள் வீடுகள் கட்டும் பொழுதும், வீடுகள், கட்டிடங்களை இடிக்கும் போதும் கட்டிட கழிவுகள் ஆங்காங்கே கொட்டப்படுகின்றன. இதை தவிர்ப்பதற்காகவே இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கட்டிடக் கழிவுகள் இருக்கும் பட்சத்தில் பொதுமக்கள் இந்த 8190000400 எண்ணிற்கு தொடர்புகொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம். இக்கட்டிட கழிவுகளைக் கொண்டு மறுசுழற்சியாக செங்கற்கள், பேவர் பிளாக்ஸ் மற்றும் எம்-சேன்ட் போன்றவற்றை தயார் செய்வதற்காக இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது'' என்றார்.

இந்நிகழ்ச்சியில் துணை ஆணையர் ப.காந்திமதி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...