சிலி நாட்டில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டரில் 6.4 ஆக பதிவு

சாண்டியாகோ: சிலி தலைநகர் சாண்டிகோவின் தெற்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் அமெரிக்காவின் சிலி நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் சாண்டியகோவின் தெற்கு பகுதியில் இருந்து 192 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.4-ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த பயங்கர நிலநடுக்கத்தால் தலைநகர் சாண்டியகோவில் கட்டடங்களில் அதிர்வு ஏற்பட்டது. அதேபோல் நாட்டின் பல்வேறு பதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இருப்பினும், சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை என்று சிலி நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிர்ச்சேதம் பற்றிய உடனடி தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

இதற்கு முன்பு கடந்த 2010-ம் ஆண்டில் 8.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கமும், சுனாமியும் தாக்கியதில் சிலியில் 500 பேர் பலியாகினர். 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் வீடுகளை இழந்தனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...