குழந்தைக்கு தாய்ப்பாலை தடுத்த தந்தை, மந்திரவாதி கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே முக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அபுபக்கர் (28). இவரது மனைவி ஹப்சத் (21). கர்ப்பிணியான ஹப்சத்தை பிரசவத்திற்காக முக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 2 நாட்களுக்கு முன் காலை அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு உடனடியாக தாய்ப்பால் கொடுக்கும் படி டாக்டர்கள் அறிவுறுத்தினர். ஆனால் குழந்தைக்கு 5 நேர தொழுகை கழிந்த பின்னரே தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று குழந்தையின் தந்தை அபுபக்கர் கூறினார். 

டாக்டர்கள் பல முறை கூறியும் தாய்ப்பால் கொடுக்க அபுபக்கர் எதிர்ப்பு தெரிவித்தார். இதுகுறித்து விசாரணை நடத்த கோழிக்கோடு மாவட்ட கலெக்டர் பிரசாந்த், தாமரச்சேரி டிஎஸ்பிக்கு உத்தரவிட்டார்.  இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து மருத்துவமனை நர்ஸ் போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் குழந்தையின் பெற்றோர் அபுபக்கர், ஹப்சத் மீது வழக்குப்பதிவு செய்தனர். 

இந்த நிலையில் குழந்தையின் தந்தை அபுபக்கரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அபுபக்கர், அப்பகுதியை சேர்ந்த ஐதூருஸ் என்ற மந்திரவாதி கூறியதால்தான், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவிடாமல் தடுத்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து முக்கம் போலீசார் அபுபக்கர் மற்றும் மந்திரவாதி ஐதூருஸை கைது செய்தனர்.

Newsletter

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...