பொங்கல் பண்டிகையை பொதுவிடுமுறை பட்டியலில் இருந்து நீக்கிய மத்திய அரசைக் கண்டித்து அரசு கலை கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்


பொங்கல் பண்டிகையை பொதுவிடுமுறை பட்டியலில் இருந்து நீக்கிய மத்திய அரசைக் கண்டித்தும், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கக் கோரியும் கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மத்திய அரசை கண்டித்து இன்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பியபடி, திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தினர். 

அப்போது, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி வழங்கக் கோரி இளைஞர்களும், மாணவர்களும் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்துவதை திசை திருப்புவதற்காகவே மத்திய அரசு பொது விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகையை நீக்கி இருப்பதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர். 

மேலும், மத்திய அரசு பொது விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகையினை உடனடியாக சேர்க்கவும், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் சமரசப்படுத்தியதை அடுத்து, மறியல் போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டனர்.

இதேபோல கோவை அவிநாசி சாலையில் உள்ள பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்ததை கண்டித்து இன்று நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதைத்தொடர்ந்து, மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய கல்லூரி நிர்வாகம் பொங்கல் விழா கொண்டாட அனுமதி வழங்கியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...