மக்கள் தொடர்பு முகாமில் ரூ.2.37 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம், இரும்பறை பகுதியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 264 பயனாளிகளுக்கு ரூ.2.37 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வழங்கினார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டத்தில் மக்கள் தொடர்பு முகாமில் நடைபெற்றது. இம்முகாமில் அப்பகுதி பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே பெறப்பட்ட மனுக்களில் தகுதியுடைய  மனுதாரர்களுக்கு உடனடி தீர்வு மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

அதேபோல், இம்முகாமில் பெறப்பட்டுள்ள 129 மனுக்கள் மீதும், தொடர்புடைய அலுவலர்கள் மூலம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

இதனைத்தொடர்ந்து, இம்முகாமில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 41 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கு ஆணை, உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, நலிந்தோர் திட்டத்தின் மூலம் 1 பயனாளிக்கு நிதியுதவி, 75 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை, ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 130 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டா, வேளாண்மைத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு இடு பொருட்கள், 9 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப்பட்டா என மொத்தம் 264 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதுபோன்று தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்களைப் பயன்படுத்தி, பயனாளிகள் மென்மேலும் வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டும் என முகாமில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே.சின்னராஜ், வருவாய் கோட்டாட்சியர் சின்னசாமி, சமூக பாதுகாப்புத்திட்டத் தனித்துணை ஆட்சியர் சென்னியப்பன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணமூர்த்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மோகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சுரேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...