ஜல்லிக்கட்டு வேண்டி கோவையில் ஐ.டி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை பீளமேடு பகுதியில் 'டைடில் பார்க்' என்னும் தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் செயல்பட்டுவருகிறது. 



இந்நிலையில், கோவையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்நிறுவனத்தில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தின் போது, ஐடி ஊழியர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்புக்கு எதிராகவும் வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்திக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். மேலும், ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். 



இந்த ஊர்வலம் டைடில் பார்க் வளாகத்தில் தொடங்கி கோவை மருத்துவக் கல்லூரி வழியாக அவிநாசி சாலையை அடைந்து, ஹோப்ஸ் சிக்னல் வழியாக மீண்டும் டைடில் பார்க் வந்தடைந்தது. இதனால் அவிநாசி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...