கோவையில் குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய பில்லூர், ஆழியாரில் இருந்து தண்ணீர் பெறப்படும் என மாநகராட்சி ஆணையர் தகவல்


கோவை மாவட்டத்தில் சிறுவாணி குடிநீர் வரத்து முழுமையாக நின்று விட்ட காரணத்தால், குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் விதமாக பில்லூர்-1 திட்டத்தின் மூலம் கூடுதலாக குறிச்சி பகுதிக்கு நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டரும், குனியமுத்தூர் பகுதிக்கு நாளொன்றுக்கு கூடுதலாக ஆழியார் குடிநீர் 20 லட்சம் லிட்டரும் விநியோகம் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

"கோவை மாவட்டத்தில் பருவமழை இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். குறிப்பாக 140 வருடங்களுக்கு முன்னர் பருவமழை இல்லாத காரணத்தினால் கோவை மாவட்டத்தில் இது போன்ற வறட்சி காணப்பட்டது. இருந்தாலும் கோவை மாநகராட்சி போர்கால அடிப்படையில் தேவையான குடிநீர் விநியோகம் அனைத்து வார்டு பகுதிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. 

குறிப்பாக ஆழியார் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தற்போது குறிச்சி பகுதிக்கு நாளொன்றுக்கு 51 லட்சம் லிட்டரும், குனியமுத்தூர் பகுதிக்கு நாளொன்றுக்கு 39 லட்சம் லிட்டரும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், சிறுவாணி குடிநீர் விநியோகம் இல்லாத காரணத்தினால் கோவை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு குறிச்சி பகுதிக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த பில்லூர் குடிநீர், நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டருடன் கூடுதலாக நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க குழாய் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

ஆழியார் நீராதாரத்திலிருந்து எடுக்கப்பட்டு வந்த குடிநீரிலிருந்து நாளொன்றுக்கு 20 லட்சம் லிட்டர் குடிநீர் குனியமுத்தூர் பகுதிக்கு வழங்க இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் குறிச்சி மற்றும் மாச்சம்பாளையம் பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீரின் அளவு குறைவுபடாது. எதிர்காலத்தில் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீரின் அளவு அதிகரிக்கப்படும்.

எனவே, குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே அனைத்து பொதுமக்களும் குடிநீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றம் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...