கோவையில் 4வது நாளாக தொடரும் இளைஞர்களின் எழுச்சி போராட்டம்

கோவை வ உ சி மைதானத்தில் நான்காவது நாளாக தொடரும் இளைஞர்களின் மாபெரும் எழுச்சி போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டிற்கு இளைஞர்களின் போராட்டம் வலுக்கு நிலையில், கோவையில் இரவு நேரங்கள் கூட பாராமல் பொதுமக்கள் கடும் பனியிலும் குடும்பங்களுடன் சென்றும் மாணவர்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். 




இந்த போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் பொதுமக்களும் பெரும் ஆதரவினை மாணவர்களுக்கு அளித்து வருகின்றனர். போராட்ட களத்தில் மாணவர்களுக்கு மருத்துவ முகாம், உணவு பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டும் வருகிறது. மேலும் இரவு நேரங்களில் ட்ரம்ஸ், பறை இசைகள் போன்றவற்றை மூலமாகவும் இளைஞர்கள் நடனம் ஆடியும், பாரம்பரிய விளையாட்டுக்களான கம்பு சுத்துதல் போன்றவற்றை நிகழ்த்தியும் உற்சாகத்துடன் போராடி வருகின்றனர்.  மைதானத்தில் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இனைந்து பீட்டாவை தடை செய்யக்கோரியும், ஜல்லிக்கட்டுக்கு மத்திய, மாநில அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் பல்வேறு முறையில் கோஷங்களை எழுப்பி போராடினர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...