77, 78- வது வார்டு பகுதியில் மாநகராட்சி பணிகள் குறித்து மாநகராட்சி துணை ஆணையர் ஆய்வு


கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 77 மற்றும் 78- வது வார்டுக்குட்பட்ட செல்வபுரம், நஞ்சப்பா கார்டன் பகுதிகளில் கோவை மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி மாநகராட்சி பணிகள் குறித்து ஆய்வில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதி மக்களைச் சந்தித்து குறைகளை கேட்டறிந்து அதுகுறித்து உடனடி நடவடிக்க மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.



இதனைத்தொடர்ந்து, மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தினை தண்ணீர் தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையற்ற பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின், அதேப் பகுதியில் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதையும், 77-வது வார்டுக்குட்பட்ட செல்வபுரம், சண்முகராஜாபுரம் பகுதியில் மீட்கப்பட்ட மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடத்தையும் மாநகராட்சி துணை ஆணையர் ஆய்வு செய்தார்.



இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதியுடன் நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், தெற்கு மண்டல உதவி ஆணையர் ரவி, உதவி நகரமைப்பு அலுவலர் சரவணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...