கோவை டூ நேபால் விழிப்புணர்வு பயணம் - பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை தடுக்க இரு சக்கர பிரச்சார பயணம்

6 இரு சக்கர வாகனங்களில், கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இந்த 7000 கி.மீ பிரச்சார பயணமானது, கோவையில் துவங்கி நேபாளில் உள்ள காத்மண்டுவில் முடிவடைய உள்ளது.



கோவை: பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைபர் செக்கியூரிட்டி நிறுவனம் சார்பில் இரு சக்கர வாகன பிரச்சார பயணத்தை, கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பயணமானது, 6 இரு சக்கர வாகனங்களில் கோவையில் துவங்கி நேபாளில் உள்ள காத்மண்டுவில் முடிவடையும். 14 நாட்கள் தொடரும் இந்த வாகன பிரச்சாரமானது, மொத்தம் 7000 கிமீ தூரத்தை கடந்து, செல்லும் வழியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய தன்னார்வலர் மற்றும் சைபர் கிரைம் கன்சல்டன்ட் சங்கர் சுப்ரமணியன், தற்போது உள்ள காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக, ஃபோன் செயலி மூலம் பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதனடிப்படையில், விழிப்புணர்வு பதாகை மற்றும் துண்டு சீட்டு பிரசுரம் செய்து கோவையில் இருந்து நேபால் வரை பயணிக்க உள்ளோம். 7000 கி.மீ பயண வழியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம், என்றார்.

பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு என்பது மிக முக்கியம். எந்தந்த செயலிகளை பயன்படுத்தக் கூடாது, புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடும் போது கவனிக்க வேண்டியவை, புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டு நபர்கள் விரிக்கும் வலையில் சிக்கிக் கொள்ளாமல், தைரியமாக காவல்துறையினரிடம் புகார் அளிக்க பெண்கள் முன்வர வேண்டும். இவை அனைத்தையும் பெண்களுக்கு எடுத்துக்கூற, இது போன்ற விழிப்புணர்வு நிகழ்சிகள் அவசியம் என்று போலிஸ் தரப்பில் தெரிவித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...