கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்டவாள பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். இதுவரை 7 சிறார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கோவை:

சேலம் ரயில்வே கோட்டத்தின் கீழ் செயல்படும் கோவை, வடகோவை, போத்தனூர், திருப்பூர் உள்ளிட்ட 93 ரயில் நிலையங்கள் உள்ளன. சமீப காலமாக இருகூர் - போத்தனூர், கோவை - வடகோவை மற்றும் சிங்காநல்லூர் பகுதிகளுக்கு இடையேயான ரயில் வழித்தடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த ஆண்டில் ஒண்டிப்புதூர் மற்றும் ப்ரூக்ஃபீல்டு பின்புறம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த மூன்று சம்பவங்களில், வந்தே பாரத் ரயிலின் கண்ணாடி மற்றும் இன்ஜின் விளக்குகள் சேதமடைந்ததுடன், சரக்கு ரயிலும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவங்களில் தொடர்புடையதாக 7 சிறார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ரயில்கள் மீது கல்வீச்சு நடத்துவது மனித உயிருக்கும் ரயில்வே பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்த ரயில்வே பாதுகாப்புப் படையினர், சம்பவங்கள் நடைபெறும் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறினர்.

மேலும், சிறார்களின் செயல்களுக்கு பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களும் பொறுப்பேற்க வேண்டி வரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் மீது கல்வீச்சு தொடர்பான புகார்களை 139 என்ற உதவி எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...