கர்நாடகாவில் பாரம்பரிய விளையாட்டான கம்பலாவுக்கு குரல் கொடுத்து மாணவர்கள் போராட்டம்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்தது. இதை தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போரட்டங்களில் இறங்கினர். தமிழகம் முழுவதும் சுமார் 7 லட்சம் பேர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து, தமிழக சட்டப் பேரவையில் அவசர சட்டம் இயற்றப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மாணவர்களின் இந்த அறப்போராட்டத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்தன. 

இந்த நிலையில், கர்நாடக மாநிலத்திம் பாரம்பரிய விளையாட்டான கம்பலாவுக்கு இருக்கும் தடையை நீக்க வலியுறுத்தி அம்மாநிலத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

எருதுகள் பந்தையமான கம்பலா விளையாட்டில் எருதுகள் துன்புறுத்தப்படுவதாக பீட்டா முறையீடு செய்த வழக்கில் அவ்விளையாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டது.  தங்கள் பாரம்பரிய விளையாட்டுக்கு இருக்கும் தடையை நீக்க வேண்டும் என்று கர்நாடக மாணவர்கள் மற்றும் மக்கள் தற்போது போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

மேலும், கன்னட பாரம்பரியத்தை காக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்திவருகின்றனர். இதனால் மாநிலம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அம்மாநில முதல்வர் சித்தராமைய்யா-வின் அரசு கம்பலா விளையாட்டுக்கு ஆதரவாக இருக்கிறது. இருந்த் போதும், உச்ச நீதிமன்றம் தடை வித்துள்ளதால் விளையாட்டை நடத்தமுடியாத சூழல் உருவாகியிருப்பதாக சித்தராமையா கூறியுள்ளார். மேலும், தேவைப்பட்டால் தமிழகம் போல கர்நாடகத்திலும் அவசரச்சட்டம் கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...