வடக்கு மண்டல அலுவலகத்தில் உதவி ஆணையர் சரவணன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்


கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் உதவி ஆணையர் சரவணன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.



 

கூட்டத்தில் பேசிய அவர்; “மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் தலைமையில் ஐந்து மண்டலங்களிலுள்ள உதவி ஆணையாளர்களின் மேற்பார்வையில் நடமாடும் மக்கள் குறைதீர்க்கும் வாகனம் ஐந்து மண்டலங்களிலும் திங்கள் முதல் வெள்ளி வரை, அதாவது திங்கட்கிழமை அன்று மத்திய மண்டலத்திற்கும், செவ்வாய் கிழமை அன்று கிழக்கு மண்டலத்திற்கும், புதன் கிழமை அன்று மேற்கு மண்டலத்திற்கும், வியாழக்கிழமை அன்று தெற்கு மண்டலத்திற்கும், வெள்ளிக் கிழமை அன்று வடக்கு மண்டலத்திற்கும் நாள்தோறும் அந்தந்த வார்டுகளுக்குச் சென்று பொது மக்களிடம் மனுக்கள் பெற்று வருகின்றது. இந்த நடமாடும் மக்கள் குறைதீர்க்கும் வாகனமானது தொடர்ந்து நாள் தோறும் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. 

மேலும் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் உடனடியாக நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வாகனமானது தொடர்ந்து ஐந்து மண்டலங்களிலும் சென்று பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றுவருகிறது. மேலும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 2017 முதல் ஐந்து மண்டலங்களில் மாதத்தின் முதல் வாரம் அதாவது திங்கள் முதல் வெள்ளி வரை மட்டும் பொதுமக்கள் மனுக்களை ஆனையாளர் மற்றும் தனி அலுவலரிடம் வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து வடக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களாக தெரு விளக்குகள், குப்பைத் தொட்டிகளை அகற்றுதல், குடிநீர் குறைபாடு, சாக்கடை தூர்வாறுதல், நாய் தொல்லைகள், அடிப்படை வசதி என பல்வேறு உதவிகள் கோரி 6 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்ட்டது.” இவ்வாறு வடக்கு மண்டல அலுவலகத்தில் உதவி ஆணையர் சரவணன் தெரிவித்தார். 

இக்கூட்டத்தில் மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.எம்.திவாகர், உதவி செயற்பொறியாளர் பிரபாகர், உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி, வடக்கு மண்டல சுகாதார அலுவலர் அருணகிரி மற்றும் மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...