தமிழகம் மதவாதம் இல்லாத அரசாக உருவாகும் வரை எந்த கட்சிக்கும் எஸ்.டி.பி.ஐ ஆதரவு கிடையாது!


தமிழகம் மதவாதம் இல்லாத அரசாக உருவாகும் வரை எந்த கட்சிகளுக்கும் எஸ்.டி.பி.ஐ ஆதரவு கிடையாது என அக்கட்சியின் மாவட்ட தலைவர் அப்துல் காதர் தெரிவித்துள்ளார்.

கோவையில் சிம்ப்ளிசிட்டிக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:

தமிழ்நாடு தற்போது உள்ள நிலைபாட்டில் தகுதியான முதல்வர் இல்லாமல் இருக்கிறது. இதுப்பற்றி அதிமுக கட்சி கலந்து ஆலோசனை செய்யவேண்டும். தமிழக மக்கள் கடந்த 8 மாதங்களாக பெரும் பிரச்சனைகளை சந்தித்து  வருகின்றனர். முன்னாள் தமிழக முதலவர் மறைவில் மர்மம், மத்திய அரசின் 500, 1000 ரூபாய் செல்லாத அறிவிப்பு, ஜல்லிக்கட்டு, ஜாதி கலாவரம், கடலில் ரசாயனம் கலப்பு மற்றும் கொலை, கொள்ளை அதிகரிப்பு போன்ற இன்னல்களால் பொதுமக்கள் பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு அதிகாரிகளுக்கு இதனால் எவ்வித பாதிப்பும் இல்லை, சாமானிய மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

ஒருபக்கம் வறட்சியில் விவசாயிகள் தற்கொலை சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. மற்றொரு பக்கம் பொருளாதார பாதிப்பினால் சாமானிய மக்கள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.  இதுபோன்ற சூழலில் தமிழக மக்களுக்கு தகுதியான முதல்வர் இல்லையென்றால் மக்களே இதற்கான தீர்வுகளை காண முற்படுவர். கூடிய விரைவில் தமிழகத்தில் மக்கள் புரட்சி ஏற்படும் சூழல் நிலவும். தற்போது தமிழகம் உள்ள நிலைமையில் மதவாதம் இல்லாத அரசு உருவாக  வேண்டும், அதுவரை எந்த கட்சிக்கும் எஸ்.டி.பி.ஐ ஆதரவு அளிக்காது.

 இவ்வாறு, எஸ்.டி.பி.ஐ மாவட்ட தலைவர் அப்துல் காதர் கூறினார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...