கோவை கிராமப்பகுதியில் மதுபானக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்

கோவை மாவட்டம் சோமனூர் அருகேயுள்ள இராமாச்சிபாளையம் பகுதியில் புதிதாக மதுபானக்கடை அமைக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைத்தொடர்ந்து, கிராமப்பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகாமையில் மதுபானக்கடை அமைக்க அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மதுபானக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், இராமாச்சிபாளையம் பகுதியில் உள்ள கோவை- சூலூர் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.

இந்த மறியலின் போது, மதுபானக்கடை அமையவுள்ள சாலையில் பள்ளிகள் மற்றும் கோவில்கள் இருப்பதால் அவ்வழியே செல்லும் மாணவிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகும் எனவும், குடியிருப்புகளுக்கு அருகே மதுபானக்கடை அமைக்கப்பட்டால் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கூறிய பொதுமக்கள், அப்பகுதியில் புதிதாக மதுபானக்கடை அமைக்க கூடாது என வலியுறுத்தினர்.

இதையடுத்து டாஸ்மாக் அதிகாரிகளுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தி மதுபானக்கடை அமைக்கப்படாது என உத்திரவாதம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக காவல் துறையினர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த போராட்டம் காரணமாக கோவை- சூலூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

முன்னதாக, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கோவை மாவட்டத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுபானக்கடைகளை கிராமப்பகுதிகளில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...