கோவையில் பருவமழையை எதிர்பார்க்காமல் வந்த பெலிகன் பறவைகள்!

தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் ஆண்டுதோறும் பருவ மழைக்காலங்களில் பறவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில் இந்திய நாட்டிலுள்ள பறவைகளான மஞ்சள் மூக்கு நாரை, கரண்டி வாயன், கூழைக்கடா, நத்தைக் குத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் போன்ற பல்வேறு வகையான பறவைகள் தமிழகத்திற்கு வருகின்றன.



இவை தவிர, வெளிநாடுகளிலிருந்து பல்வேறு வகையான பறவைகள் தமிழ்நாட்டின் பறவைகள் சரணாலயத்திற்கு வந்து செல்கின்றன. குறிப்பாக, ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரியா நாடுகளில் இருந்து பெலிகன் பறவைகள் பெருமளவில் இங்கு வருகின்றன. இங்கு வரும் பறவைகள் நான்கு மாத காலம் வரை தங்கியிருப்பதுடன் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்து அவற்றுடன் திரும்பிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

அதில் குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரியா நாடுகளில் இருந்து வரும் பறவைகளில் அதிக எடை கொண்ட பெலிகன் பறவைகளே அதிகம். கோவைப் பகுதியில் உள்ள சிங்காநல்லூர் குளம், பேரூர் குளம், முத்தணன் குளம், குறிச்சிக் குளம், உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் ஆகிய குளங்களைத் தேடி பெலிகன், ஸ்பூன் பில், நாதன்சாளர், டார்டர், பெயிண்டட் ஸ்டார்க், பென்டைல் டக் உள்ளிட்ட வெளிநாட்டுப் பறவைகள் உணவுக்காகவும், இனப்பெருக்கத்துக்காகவும் இடம் பெயர்ந்து இங்கு வருவது வழக்கமாக கொண்டுள்ளது. 



இந்நிலையில், தமிழ்நாட்டில் சென்ற வருடம் பருவ மழை சரியாக பெய்யாததால் கோவையில் உள்ள பல்வேறு குளங்களில் நீர்மட்டம் குறைந்துள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து ஆண்டுதோறும் வரும் பெலிகன் பறவைகள் வழக்கம் போல் இந்த ஆண்டும் வந்துள்ளது.

கோவையில் உள்ள குளங்களுக்கு அதிக எண்ணிக்கையில் வந்துள்ள பெலிகன் பறவைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.



Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...