வங்கி மேலாளர் வீட்டுக்கதவை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை

கோவை சிங்காநல்லூர் பகுதியில் வங்கி மேலாளர் ஒருவரின் வீட்டுக்கதவை உடைத்து 30 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சிங்காநல்லூர் காமராஜர் சாலை துளசியம்மாள் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இவரும், இவரது மனைவியும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் சுரபி அப்பார்ட்மெண்ட்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில், நேற்று ஸ்ரீகாந்தும் அவரது மனைவியும் பணி நிமித்தமாக சென்று விட்டு இரவு வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் தொடர்ந்து, வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 30 சவரன் தங்க நகை மற்றும் 15 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து சிங்காநல்லூர் காவல் துறைக்கு வங்கி அதிகாரி ஸ்ரீகாந்த் தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்க்கு  வந்த காவல் துறையினர் வீட்டின் கதவு, பீரோ ஆகியவற்றில் பதிவாகியுள்ள கைரேகைகளை பதிவு செய்து பழைய குற்றவாளிகளின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்து அவர்கள் ஏதேனும் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

கொள்ளை போன தங்க நகைகளின் மதிப்பு சுமார் 7 லட்ச ரூபாய் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலிசார் கொள்ளை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...