கழிவுநீர் கால்வாயில் கொட்டப்படும் குப்பைகள்: நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?


கோவை திருச்சி சாலையில் உள்ள ராஜலட்சுமி மில்ஸ் பகுதியில் கழிவு நீர் கால்வாய் செல்கிறது. தெற்கு பகுதியின் பெரும்பகுதி கழிவு நீரை எடுத்து சென்று குளத்தேரி குளத்தில் விடும் கால்வாயில் தற்போது அதிக அளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. குப்பைகள் கொட்டப்படுவதோடு, அப்பகுதி சரிவர தூர்வாரப்படாததால் கழிவு நீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் அருகே பள்ளி உள்ளதால் அங்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறுகையில், 'இங்கு குப்பைகள் கொட்டக்கூடாது என்று தொடர்ந்து நாங்கள் கூறிவருகிறோம். ஆனாலும், இரவு நேரங்களில் சிலர் வந்து குப்பைகளை கொட்டிவிடுகின்றனர். இதனால் கடும் கழிவுநீர் பாதையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசிவருகிறது. இங்கு குப்பத்தொட்டி இல்லாமல் இருப்பதால் தான் அதிக அளவு குப்பைகள் கால்வாயில் கொட்டப்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து தொற்று நோய் பரவமால் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக இப்பகுதி தூர்வாரப்பட வேண்டும்' என்றனர்.



இது குறித்து புகார் அளிக்க மாநகராட்சி சுகாதார ஆய்வாளரை தொடர்பு கொண்டோம். ஆனால், தொலைபேசியை அவர் எடுக்கவில்லை. அதிகாரிகள் உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு நடவடிக்கை எடுத்தால் நோய் தொற்றில் இருந்து அப்பகுதி மக்களை காப்பாற்ற முடியும்.



புகார் குறித்து அப்பகுதியை சேர்ந்த மக்களிடம் பெயர் மற்றும் புகைப்படம் போன்ற விவரங்கள் கேட்ட போது, விவரங்கள் தர பயப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...