கோவை மாவட்ட பத்திரிகையாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்


தமிழக அரசு செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் பத்திரிகையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பத்திரிகையாளர்களுக்கு மாவட்ட அளவில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்படவுள்ளது.

அதனடிப்படையில் கோவை மாவட்டத்தில் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணிபுரியும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் ஆகியோர்களுக்கு மாபெரும் இலவச மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருகின்ற ஏப்ரல் 27ம் தேதியன்று காலை 8 மணி முதல் மதியம் 5 மணி வரை நடைபெறவுள்ளது. 

இம்மருத்துவ முகாமில் பொது மருத்துவ பரிசோதனை, இருதய சிறப்பு பரிசோதனை, இரத்த பரிசோதனை, கல்லீரல் மற்றும் குடலியல் பரிசோதனை, மூட்டுவலி மற்றும் எலும்பு முறிவு சிகிச்சை, சர்க்கரை அளவு கண்டறிதல், கண் சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை சிகிச்சை, சிறுநீரக சிகிச்சை, இருதய நோய் சிகிச்சை, குழந்தைகள் நல சிகிச்சை உள்ளிட்ட அனைத்து வகையான மருத்துவ பரிசோதனைகளும் மற்றும் ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளது.

மேலும் பரிசோதனைகளில் தீவிர நோய் தொற்று கண்டறியப்பட்டால் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்படவுள்ளது.  

எனவே, கோவை மாவட்டத்தில் உள்ள மாவட்ட மற்றும் தாலுகாவில் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணிபுரியும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் ஆகியோர் மேற்குறிப்பிட்ட நாளில் நடைபெறவுள்ள இலவச மருத்துவ முகாமில் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து பயன்பெற வேண்டுபென கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...