ஏப்ரல் 15ம் தேதியன்று சிறை அலுவலர் பதவிக்கான போட்டித் தேர்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வருகின்ற ஏப்ரல் 15ம் தேதியன்று (சனிக்கிழமை) பகல் 10 மணி முதல் 1 மணி வரையும் மற்றும் பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரையும் சிறை அலுவலர் பதவிக்கான போட்டித் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை சித்தாபுதூரில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் உள்ள இரு தேர்வு கூடத்தில் நடைபெறவுள்ள இத்தேர்வினை 546 நபர்கள் எழுதுகின்றனர். இத்தேர்வினை நடத்த 2 முதன்மை கண்காணிப்பாளர்கள், ஒரு மொபைல் அலுவலர், ஒரு வீடியோ கிராபர் மற்றும் நமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ஆய்வு அலுவலர்கள் ஆகியோர் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தேர்வு மையங்களில் பாதுகாப்பின் பொருட்டு போதுமான காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையத்திற்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தால் தடையில் மின்சாரம் வசதி செய்யப்பட்டுள்ளது.

இத்தேர்வு எழுதும் தேர்வர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வழங்கபட்ட நுழைவுச் சீட்டு கொண்டு வர வேண்டும் எனவும், தேர்வு அறைக்குள் மொபைல் போன் உள்ளிட்ட மின்னியக்க கருவிகள் எதையும் எடுத்து வர வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தேர்வு எழுதுபவர்கள் ஏதேனும் முறைகேட்டில் ஈடுபட்டால் அவர்கள் எதிர்காலத்தில் அரசு தேர்வுகள் எழுத தடை செய்யப்படுவது மட்டுமின்றி அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் முதன்மை ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...