ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு மாமியார் கொலை மிரட்டல் விடுவதாக மாவட்ட ஆட்சியரிடம் பெண் புகார்


கோவை மாவட்டம், சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா (27). இவரும் பொள்ளாச்சியை சேர்ந்த மோகன் என்பவரும் காதலித்து கடந்த 2011ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதியினருக்கு ரித்திகா என்ற நான்கரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், கணவரின் தாயார் வரதட்சணை கேட்டு கொலை மிரட்டல் விடுவதாக இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் திவ்யா மனு அளித்தார். அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

எனது கணவர் பெயர் மோகன். எங்களுக்கு கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடைபெற்று ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், எனது கணவரின் தாயார், என்னிடம் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு தொடர்ந்து துன்புறுத்தி வருகிறார். எனது கணவரை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று அடைத்து வைத்துள்ளனர். இதுகுறித்து கேட்டாலும், பணம் தராவிட்டாலும் கொலை செய்துவிடுவதாகவும் எனக்கு மிரட்டல் விடுத்து வருகிறார்.

இது தொடர்பாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் புகாரின் பேரில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் இப்பிரச்சனையில் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...