தமிழகத்தில் சுட்டெரிக்கும் அனல் காற்று- வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என வானிலை மையம் தகவல்


தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 18) அனல் காற்று வீசும் வாய்ப்புகள் இருப்பதால் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அதிகப்படியான வெயில் வாட்டி எடுத்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கூடலூர், விழுப்புரம், நாகபட்டினம், புதுகோட்டை, வெல்லூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட தமிழகத்தின் 18 மாவட்டங்களில் தீவிர அனல் காற்று வீசும். ஆகையால் மக்கள் பகல் 12 முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், அனல் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ள 18 மாவட்ட ஆட்சியர்களுக்கு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, கோவை மாவட்டத்தில் வரலாறு காணதளவு தற்போதே வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மேலும் அனல் காற்று வீசக்கூடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவிவருகிறது.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...