'செய்தியாளர்கள் மொழி, இனம் பாகுபாடில்லாமல் இருக்க வேண்டும்' இளம் பத்திரிக்கையாளர்களுக்கான பயிற்சிப் பட்டறையில் மார்டின் ராஜா பேச்சு


கோவையில் உள்ள இளம் பத்திரிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில், பயிற்சிப்பட்டறை ஒவ்வொரு ஞாயிற்று கிழமை அன்று நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சிப்பட்டறையில் மூத்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்கள் இளம் பத்திரிக்கையாளர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். அதன்படி, ஐந்தாவது பயிற்சிப்பட்டறை  நிகழ்வு இன்று காலை கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக சன் தொலைக்காட்சியின் மூத்த செய்தியாளர் மார்டின் ராஜா கலந்து கொண்டார். 



அப்போது அவர் 'காட்சி ஊடகவியல் செய்தி சேகரிப்பு' என்ற தலைப்பில் இளம் பத்திரிக்கையாளர்களிடையே பேசினார்.அவர் பேசியதாவது :- 

ஒவ்வொரு செய்தியாளரும் கொடுக்கும் செய்திகள் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்க வேண்டும். மாறாக, ஒரு செய்தியால் மக்களுக்கு அல்லது ஒரு சமூகத்திற்கு பிரச்சனை ஏற்படும் என்றால், அந்த செய்தியை தவிர்ப்பது நல்லது. முடிந்த வரையில் கடினமான வார்த்தைகளையோ அல்லது மிகைப்படுத்தும் விதமான வார்த்தைகளையோ பயன்படுத்த வேண்டாம். 

இன்றைய சூழலில் பரபரப்பை ஏற்படுத்துவது தாம் செய்தி என்றாகிவிட்டது. உதாரணமாக கேரளா-தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே குடிநீர் கொடுத்து பெறுவது என்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளது. ஆனால், தண்ணீர் கிடைக்காத நேரத்தில் தமிழக ஊடகங்கள் கேரளாவிற்கு எதிராகவும், அங்கு உள்ளவர்கள் தமிழகத்திற்கு எதிராகவும் செய்திகளை பதிவு செய்வதை கைவிட வேண்டும். 

அதில் உள்ள பிரச்சனைகளை தீர ஆய்வு செய்து பின்னர் செய்தி வெளியிடுவது தான் பத்திரிக்கை தர்மம். 

மதம், இனம், மொழி மற்றும் மாநில எல்லைகளை கடந்து பத்திரிக்கையாளர்கள் அனைவரும்  நடுநிலையோடு செயல்படுதல் அவசியமாகிறது.

இவ்வாறு அவர் பேசினார். 



முன்னதாக, இளம் பத்திரிக்கையாளர்களுக்கு இடையே தொகுப்பாளர்-செய்தியாளர்கள், செய்தி வெளியிடும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...