சிங்காநல்லூர் அருகே நாய் மரணம்: விஷம் கலந்த உணவு கொடுத்ததாக புகார்

கோவை சிங்காநல்லூர் அருகே தெரு நாய் ஒன்று திடீர் மரணம் அடைந்தது. விஷம் கலந்த உணவு கொடுத்ததாக அப்பகுதி குடியிருப்பாளர் ஒருவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள நீலிக்கோணாம்பாளையம், சின்னத்தோட்டம் பகுதியில் நேற்று (ஆகஸ்ட் 1) ஒரு தெரு நாய் திடீரென இறந்து கிடந்தது. இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த தர்மேந்திரவர ஈஸ்வரன் (48) என்பவர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரில், தர்மேந்திரவர ஈஸ்வரன் பேப்ரிகேஷன் தொழில் செய்து வருவதாகவும், வழக்கமாக அப்பகுதியில் உள்ள தெரு நாய்களுக்கு உணவு வைப்பதாகவும் கூறியுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த பூபதி என்பவர் கோழி கழிவில் விஷம் கலந்து கொடுத்து நாயை கொலை செய்திருப்பதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் பூபதி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேக நபரான பூபதியை தேடி வரும் காவல்துறையினர், இச்சம்பவம் தொடர்பான மேல்விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

விலங்குகள் நலன் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், இது போன்ற சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தெரு நாய்களின் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் நிலையில், இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...