போலீஸ் விசாரணைக்கு பயந்து ஓடிய இளைஞர் கோவை வாளாங்குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

கோவை பந்தய சாலையில் போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மூன்று இளைஞர்களில் ஒருவர் தப்பி ஓடி வாளாங்குளத்தில் குதித்து உயிரிழந்தார். மற்ற இருவரிடம் விசாரணை தொடர்கிறது.



கோவை: கோவை பந்தய சாலை பகுதியில் நடந்து சென்ற மூன்று இளைஞர்களில் ஒருவர் போலீஸ் விசாரணைக்கு பயந்து ஓடி வாளாங்குளத்தில் குதித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒண்டிபுதூரை சேர்ந்த விஷ்வா மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் கோவை பந்தய சாலை பகுதியில் நடந்து சென்றனர். இந்நிலையில், சந்தேகத்தின் பேரில் இராமநாதபுரம் போலீசார் மூவரையும் பிடித்து விசாரித்து வந்தனர். விசாரணையின் போது விஷ்வாவின் செல்போனை பறிமுதல் செய்தனர்.

விசாரணைக்கு பயந்த விஷ்வா அங்கிருந்து தப்பி ஓடி, கோவை வாளாங்குளத்தில் குதித்து தப்ப முயன்றார். ஆனால், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பந்தய சாலை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.



போலீசார் விஷ்வாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, உயிரிழந்த விஷ்வாவின் நண்பர்கள் இருவரிடம் இராமநாதபுரம் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் விசாரணையில், விஷ்வாவின் நண்பர்கள் இருவரும் கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் என தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...