ரோட்டரி கிளப் முன்னாள் தலைவரின் தபால்தலை வெளியிட முடிவு

ரோட்டரி கிளப்பின் முன்னாள் தலைவர் டி.டி. ரத்தினசபாபதிபிள்ளையின் நினைவு நாளையொட்டி, அவரது தபால்தலையை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை, ஜனவரி 17

ரோட்டரி கிளப்பின் முன்னாள் தலைவர் டி.டி. ரத்தினசபாபதிபிள்ளையின் நினைவு நாளையொட்டி, அவரது தபால்தலையை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அவினாசி சாலையில் உள்ள கோயம்புத்தூர் வர்த்தக ஹாலில் வரும் 20-ம் தேதி ரோட்டரி கிளப் சார்பில் ”நைட்ஸ் இன் காக்கிஸ்”  என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன் மற்றும் கோவை மாவட்ட எஸ்.பி. மூர்த்தி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இதில், சிறந்த 10 போலீஸ் அதிகாரிகளுக்கு விருது வழங்கிக் கவுரவிக்கப்பட உள்ளனர். இதைத் தொடர்ந்து, ரோட்டரி கிளப்பின் முன்னாள் தலைவர் டி.டி. ரத்தினசபாபதிபிள்ளையின் நினைவு நாளையொட்டி, அவரது தபால்தலையை நீதிபதி பாஸ்கரன் வெளியிட உள்ளார். 

டி.டி. ரத்தினசபாபதிபிள்ளை இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, கோவை மாவட்ட அரசு வழக்கறிஞராக செயல்பட்டுள்ளார். விலங்குகள் கொடுமைப்படுத்துதலை தடுக்கும் சங்கத்தின் தலைவராகவும், ரெட் கிராஸ் சொசைட்டியின் துணைத் தலைவராகவும், கோவை பார் கவுன்சிலின் தலைவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...