1.5 கிலோ எடையுள்ள போலி தங்க நகைகளை விற்க முயன்ற இருவர் கைது

கோவையில் 1.5 கிலோ எடையுள்ள போலி தங்க நகைகளை விற்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை, ஜனவரி 18 

கோவையில் 1.5 கிலோ எடையுள்ள போலி தங்க நகைகளை விற்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவை சலீவன் வீதியை சேர்ந்தவர் ரவி (54). இவரிடம் மைசூரைச் சேர்ந்த இருவர் தங்களுக்கு தங்கப் புதையல் கிடைத்திருப்பதாகவும், ரூ.30 லட்சம் கொடுத்தால் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறினர். 

இதை தொடர்ந்து, ரவி அவர்களிடம் நகையை காண்பிக்குமாறு கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து,

 நேற்று காலை காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையம் அருகே வந்த அவர்கள் ரவியிடம் 1.5 கிலோ எடையுள்ள நகைகளை காண்பித்தனர். 

அப்போது அவை தங்கமுலாம் பூசப்பட்ட கவரிங் நகைகள் என்பது தெரியவந்தது. 

இது தொடர்பாக அவர் காட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இருவரும், மைசூர் பகுதியை சேர்ந்த சத்ருஹான் (30), கவுரி (45) என்பதும்,  1.5 கிலோ எடையுள்ள போலி தங்க நகைகளை விற்க முயன்றதும் தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து,  வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...