மாணவர்களை மின் ஆற்றல் சேமிப்புத் தூதுவர்களாக உருவாக்கும் பயற்சி

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துடன் ரோட்டரி கோயமுத்தூர் கேலக்ஸி மற்றும் எஸ்என்எஸ் இராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து மாணவ, மாணவிகளை மின் ஆற்றல் சேமிப்புத் தூதுவர்களாக உருவாக்கும் பயிற்சியின் துவக்க விழா புதனன்று (இன்று) நடைபெற்றது. எஸ்என்எஸ் இராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மின் சிக்கனத்தை வலியுறுத்தும் பொருட்டு பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.



இவ்விழாவினை கோவை மாவட்ட மின் பகிர்மான வட்ட தலைமைப் பொறியாளர் டி.ஆல்தொரை தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து, ரோட்டரி கோயமுத்தூர் கேலக்ஸி முன்னாள் தலைவர் எம்.முருகன் சிறப்புரையாற்றினார். 

இதுகுறித்து, தலைமைப் பொறியாளர் டி.ஆல்தொரை நமது நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

''கோவை மாவட்டத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களைத் திரட்டி மின் சிக்கனத்தை வலியுறுத்தி மின் ஆற்றல் சேமிப்புத் தூதுவர்களாக உருவாக்கும் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் 100 மாணவர்கள் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரிடம் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், தனி நபர் ஒருவர் ஒருநாளுக்கு 1 யூனிட் மின்சாரம் சேமிப்பதன் மூலம், 1 லட்சம் மக்கள் சுமார் 1 லட்சம் யூனிட் மின்சாரத்தினை ஒரே நாளில் சேமிக்கலாம். இதற்காகவே, தற்போது கோவையில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியிலும் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. நாளை கற்பகம் பல்கலைக் கழகத்தில் மின் சிக்கனத்தை வலியுறுத்தி இந்நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பல லட்சம் யூனிட் மின்சாரம் மக்களால் சேமிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது'' என்றார்.



இதில், கோவை மாவட்ட மின் பகிர்மான வட்ட வடமதுரை செயற்பொறியாளர் ஆர்.நந்தகோபால், கோவை வடக்கு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஜி.என்.சுதாகர், மின்னியல் செயற்பொறியாளர் கே.விஜயகௌரி, கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக மாவட்ட சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர் சி.லோகாம்பாள், சீராநாய்க்கன்பாளைய மின் செயற்பொறியாளர் ஆர்.சுப்பிரமணியம், ரோட்டரி கோயமுத்தூர் கேலக்ஸி திட்டத்தலைவர் ச.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு அறிவியல் மன்ற தலைவர் வீ.சிவகாமி, மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர் ஜெய் கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...