சங்கரா கல்லூரியில் “உயர்கல்வியில் தரமேன்பாடுகள்” குறித்த தேசியக் கருத்தரங்கு

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் இன்று தேசிய தரமதிப்பீட்டு அங்கீகாரக் குழுவின் நிதிநல்கையுடன் கல்லூரியின் உள்தர உறுதிக் குழுவின் சார்பில் “உயர்கல்வியில் தரமேன்பாடுகள்” என்ற தலைப்பில் ஒரு நாள் தேசியக் கருத்தரங்கு கல்லூரி அரங்கில் நடைபெற்றது. கல்லூரி பாலகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். கோவை பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) வனிதா கருத்தரங்கினைத் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அவரது உரையில் உலகத்தரத்தை அடைய கடைப்பிடிக்க வேண்டிய மாறுதல்கள் குறித்து பேசினார்.



கருத்தரங்கம் மூன்று அமர்வுகளாக நடைபெற்றது. முதல் அமர்வில் காந்திகிராம பல்கலைக்கழக வேதியியல் துறைப் பேராசிரியர் மற்றும் IQAC இயக்குநர் சேதுராமன் உயர்கல்வியில் தர மதிப்பீடுகள் என்னும் தலைப்பில் ஒளிப்படக்காட்சிகள் மூலம் விளக்கினார். அவரது உரையில் தகுதி வாய்ந்த மனித வள ஆதாரங்களை உருவாக்குவதில் ஆய்வுப்பணியில் பயிற்சிகள், ஆசிரியர் தொழிலில் நிர்வாகத் தேவைகள் மற்றும் தகுதியான வேலை வாய்ப்புகளை உருவாக்குதலின் தேவைகளை எடுத்துரைத்தார்.



இரண்டாம் அமர்வில் காந்திகிராம பல்கலைக்கழகக் கணினிப் பயன்பாட்டுத் துறைத்தலைவர் சண்முகவடிவு உயர்கல்வி நிறுவனங்களில் தரமதிப்பீட்டு அளவீடுகள் என்னும் தலைப்பில் ஒளிப்படக்காட்சிகள் மூலம் உரையாற்றினார். அவரது உரையில் புதிய கல்விக் கொள்கை, வகுப்பறையில் ஆசிரியர்களின் செயல்பாடுகள், ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் குறித்து விளக்கமாக கூறினார்.



மூன்றாம் அமர்வில் திருச்சி ஸ்ரீமத் ஆண்டவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் ராதிகா கற்றல் கற்பித்தலில் தர மேன்பாடுகள் குறித்து சிறப்பான விளக்கவுரை நிகழ்த்தினார். 



இக்கருத்தரங்கில் கோவை, ஈரோடு, ஊட்டி, பகுதிகளில் உள்ள கல்லூரிகளிலிருந்து 250க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மற்றும் பல்வேறு கல்லூரிகளின் IQAC ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர், கருத்தரங்கு நிரைவு நிகழ்ச்சியில் சங்கரா கல்லூரி IQAC யின் பொறுப்பாளர் உமா தேசியதரமதிப்பீட்டு அங்கீகாரக் குழுவின் நடவடிக்கைகள் குறித்து சுருக்கமாக உரை நிகழ்த்தினார். கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. நிறைவாக சங்கரா கல்லூரியின் IQACயின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்பாபு நன்றியுரை கூறினார்.



Newsletter

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...