கோவை: கூட்டுறவு
மற்றும் தேசிய வங்கிகளில் உள்ள
விவசாய கடன்களை ரத்து செய்ய
வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,
கோவையில் ரயில் மறியல் போராட்டத்தில்
ஈடுபட முயன்ற 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள்
இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டனர்.
கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும். கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும். மீத்தேன் மற்றும் கெயில் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநில முழுவதும் மறியல் போராட்டம் இன்று நடத்தப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக கோவை இரயில் நிலைய வளாகத்தில் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோவை மாநகர் மாவட்ட தலைவர் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத் தலைவர் தங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வருவதற்கு விவசாய கடனே காரணம். ஆனால் இந்த பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் மெளனம் காத்து வருவதைக் கண்டிக்கவே இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மேலும் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் கெயில் நிறுவனத்திற்கு எதிரான வழக்கில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் முறையாக நீதிமன்றம் செல்லவில்லை.
தமிழக அரசிற்கு விவசாயிகள் மீது அக்கறையில்லை. மேலும் இத்திட்டத்தை, மற்ற மாநிலங்களில் செயல்படுத்துவதைப் போல நெடுஞ்சாலை வழியாக எரிகுழாய்கள் பதிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினர். இதையடுத்து மத்திய மாநில அரசிற்கு எதிரதாக விவசாயிகள் முழக்கங்கள் எழுப்பினர். தொடர்ந்து இரயில் மறியலில் ஈடுபட முயன்ற 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.