நாளை பிற்பகலுக்குள் முடிவு எடுக்க வேண்டும்: விஜயகாந்துக்கு சந்திரகுமார் கெடு

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கூட்டணி முடிவை மறுபரிசீலனை செய்து திமுக கூட்டணியில் இணைவது குறித்து நாளை பிற்பகலுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர்  சந்திரகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கெடு விதித்துள்ளனர்.

இதுகுறித்து தேமுதி கொள்கைப் பரப்புச் செயலாளரும், ஈரோடு கிழக்கு பேரவை  உறுப்பினருமான சந்திரகுமார் தலைமையில் 5 எம்.எல்.ஏ.க்கள் உட்பட 10 மாவட்ட  செயலாளர்கள் திடீரென கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். மேலும் இவர்கள் ஐவரும் மக்கள் நலக்கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சந்திரகுமார், மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், கும்மிடிப்பூண்டி பேரவை உறுப்பினர் சி.எஸ்.சேகர்  உள்ளிட்ட நிர்வாகிகள் சென்னையில்  இன்று செய்தியாளர்களுக்கு அளித்த

பேட்டியில் கூறியதாவது :

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்துக்கு உண்மையான விசுவாசிகளாக கடந்த 5 ஆண்டு அதிமுக ஆட்சியில் பல்வேறு நெருக்கடிகள் மற்றும் நிர்பந்தங்களுக்கு இடையே பணியாற்றி வந்தோம்.

அதிமுக ஆட்சியில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு அடைந்த ஒரே கட்சி தேமுதிகதான். கட்சியினர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிராமம் முதல் நகரம் வரையுள்ள அனைத்து தொண்டர்களும் கடுமையாகப்  பாதிக்கப்பட்டனர். ஆர்பாட்டம், போராட்டங்களுக்கு நீதிமன்றம் வரை சென்று அனுமதி பெற்று வந்தனர்.

இந்நிலையில் அதிமுக ஆட்சியை அகற்றுவேன் என்று கூறிவந்தார் விஜயகாந்த். இதற்காக எந்த தியாகத்தையும் செய்வேன் என்றும் கூறிவந்தார்.

இந்நிலையில், திடீரென்று மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த்  இணைந்தார். இதுகுறித்து நிர்வாகிகளிடம் எவ்வித தகவலும் அவர் தெரிவிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து மார்ச் 23-ம் தேதி அவசர வேலை இருக்கிறது தலைமை அலுவலகம் வாருங்கள் என அழைத்த விஜயகாந்த், திடீரென்று மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தார். முன்னதாக 'திமுகவுடன் பேசுகிறேன், இவ்வளவு சீட் கொடுக்கிறேன் என்று கூறுகிறார்கள்' என கூறிய விஜயகாந்த் ஒட்டுமொத்த நிர்வாகிகள், தொண்டர்களின் மற்றும் தமிழக மக்களின் மனநிலைக்கு மாறாக திடீரென்று மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து விட்டார்.

தேமுதிகவில் உள்ள 95 சதவீதம் பேர், திமுகவுடன்தான் இணைய வேண்டும் என விரும்புகின்றனர். மக்கள் நலக் கூட்டணியால் அதிமுகவை வீழ்த்த முடியாது. எனவே முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள். ஒரு கட்சியில் தலைவர் எடுக்கும் முடிவை தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் எதார்த்த நிலை. எனினும், தொண்டர்கள் விரும்பும் முடிவையும் தலைவர் எடுக்க வேண்டும்.

கூட்டணி முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என வலியுறுத்தி கடந்த 24-ம் தேதி தலைவர் விஜயகாந்துக்கு ஒரு கடிதம் எழுதினோம். எனினும், இதுவரை அதற்கு பதில் இல்லை. நாங்கள் யாரும் தேமுதிகவிலிருந்து விலகவில்லை. நாளை பிற்பகலுக்குள் விஜயகாந்த் கூட்டணி முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லையெனில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து நாளை முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Students, teachers and parents celebrate Checkpoint milestone at Spectrum Northern Lights School, Coimbatore

Spectrum Northern Lights School in Coimbatore celebrated its Primary Checkpoint Examination results, recognising student...

Union MoS Muralidhar Mohol reviews Coimbatore Airport expansion works

Union Minister of State for Civil Aviation Muralidhar Mohol held discussions with airport officials at Coimbatore Airpor...

Dr S Rajasekaran receives Bharat Ratna Lata Mangeshkar Vaidyak-Ratna Award

Ganga Hospital Chairman Dr S Rajasekaran was honoured as the first recipient of the Bharat Ratna Lata Mangeshkar Vaidyak...

Union Budget 2026 lays roadmap for manufacturing, MSMEs and skills: CII Southern Region

CII Southern Region said Union Budget 2026–27 provides policy support for manufacturing, MSMEs, agriculture and skills,...

1054 Park Group students set world record in e-waste awareness drive

A total of 1054 students from Park Group of Institutions created a world record in Coimbatore by identifying and categor...

From kolams to Silambam: Harvest Fiesta lights up VIBGYOR High, Coimbatore

VIBGYOR High Coimbatore celebrated Harvest Fiesta 2026 with a vibrant Pongal event featuring traditional décor, cultural...