கடந்த ஆண்டு கருமத்தம்பட்டி அருகே 5 மாவோயிஸ்ட்களை போலீஸ் கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து கோவை நீதமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் .
இதனையடுத்து கோவை முதன்மை நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டோபர் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களை விசாரணை செய்த நீதிபதி அவர்களது காவல் நீடிப்பை 7ம் தேதி முதல் 27ம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டார்.

இதனையடுத்து நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்ட மாவோயிஸ்ட்கள் தேர்தலை புறக்கணிப்பதாக முழக்கமிட்டனர்