கோவை அவினாசி சாலையில் உள்ள
தனியார் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ
விபத்தில் பல இலட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.

கோவை அவினாசி சாலையில் ஜி பிளாஸ்ட் என்ற தனியார் பிளாஸ்டிக் பொருட்கள் தாயரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு இருந்த போது, வெல்டிங் வைக்கும் போது தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஊழியர்கள் உடனடியாக வெளியேறினர். இதனிடையே மளமளவென பிடித்த தீயில் நிறுவனம் முழுவதும் தீயில் கருகியது. இது குறித்து தகவல் கிடைத்தன் பேரில், 5 தீயணைப்பு வண்டிகளில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடினர். ஆனால் தீ தொடர்ந்து எரிந்த்தால் கட்டிடத்தின் சுவர்களை இடித்து தீயை அணைக்க முயன்றனர். இதையடுத்து சுமார் ஒரு மணி நேரம் போராட்ட்த்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் பல இலட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்ட்திற்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பரபரப்பான அவினாசி சாலையில் ஒரு மணி நேரம் கரும்புகை வெளியேறி புகை மூட்டம் சூழ்ந்த்தால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். பட்டப்பகலில் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.