கோவை: நாம்
தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அக்கட்சியின் மேட்டுப்பாளைம் சட்டமன்ற உறுப்பினர் அ.அப்துல் வகாப்பை
ஆதரித்து திங்கள்கிழமை இரவு பிரசாரத்தில் ஈடுபட்டார்.
கூட்டத்தில் அவர் கூறியதாவது:
எனது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னதாக பதவிகளால் கிடைக்கும் சுகங்களை அனுபவித்தவர்கள் இல்லை. மக்களோடு மக்களாக அவர்களின் இன்ப துன்பங்களில் ஒன்றாக அனுபவித்த சாதாரண குடிமக்கள். தமிழனின் எழுச்சிக்காக போராடுபவர்கள். “தனிஉடமை கொடுமைகளை களைய புரட்சி செய்யடா, தானாக எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா” என்ற பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடியதன் வழி நடப்போம் .
மேலும், மத்திய தொழிற்சங்கங்களுக்கு கீழ் இல்லாத மற்ற சிறு தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒன்று திரட்டி வருகிற 30-ம் தேதி தில்லியில் மாபெரும் அகில இந்திய தொழிற்சங்கங்கள் மாநாடு நடத்த உள்ளதாகவும், அதற்கான முறையான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.