கோவையில் வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் பொதுமக்களுக்கு வாக்களிப்பது குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
தமிழக சட்டமன்ற தேர்தல் மே மாதம் 16 ம் தேதி நடைபெற உள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் நூறு சதவீத வாக்குபதிவு என்ற இலக்கை அடைய மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வலுயுறுத்தி ஜமாப் அடித்து தேர்தல் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். மேலும் ஜனநாயகத்தை பேணிக்காத்திட 100 சதவீதம் வாக்களிப்போம், உங்கள் வாக்கு உங்கள் எதிர்காலம் எனவே அதனை சரியாக பயண்படுத்துவீர் என வாக்களிப்பதன் அவசியம் குறித்த பதாகைகளை ஏந்தியும் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து இதில் கோவை மண்டல தேர்தல் அதிகாரியான சுபா குப்தா கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்களிப்பது குறித்த செய்முறை விளக்கம் அளித்தார்.