கோவை மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி. இவரது கணவர் செல்வகுமார். இவர் சில மாதத்திற்கு முன்பு விபத்தில் இறந்துவிட்டதால் இவரது காப்பீட்டு தொகை 2,85,000 வழங்க கோவை நீதி மன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் நான்கு மாதங்கள் ஆகியும் இதுவரை இவர்களுக்கு பணம் தராமல் வங்கி நிர்வாகம் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வெறுப்படைந்த தனலட்சுமி தனது மகள் மற்றும் வழக்கறிஞர்களோடு வங்கி முன் அமர்ந்து தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.