பழைய வாகனங்களில் வேக கட்டுப்பாட்டுப் கருவி பொருத்துவதில் விலக்கு அளிக்க கோரி கோவை மாவட்ட வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கோவை லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் இன்று மனு அளிக்கப்பட்டது.
முன்னதாக மாநிலத் தலைவர் கலிய பெருமாள் கூறியதாவது:
புதிய லாரிகளில் வேக கட்டுப்பாட்டுக் கருவி பொருத்துவதில் எந்தவித தடையும் இல்லை. ஆனால் பழைய வாகனத்தில் இக்கருவி பொருத்துவது மிகவும் சிரமமாக உள்ளது.
மேலும், சுங்க சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் கட்டாயப் படுத்துகின்றனர்.
இதில் இருந்து விலக்கு அளிக்க வெண்டும் என்று கோவை லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மனு அளித்து உள்ளோம் என்று தெரிவித்தர்.