தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து கோவை தெற்கு மாவட்ட தலைவர் பி.எஸ். சரவண குமார் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி காங்கிரஸ் கட்சியில் இணைந்தாக அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அருள் குமார் தெரிவித்தர்.

இது தொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
பி.எஸ்.சரவண குமார் கட்சியில் இருந்து விலகியதில் கட்சிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அவர் மட்டுமே தனியாக காங்கிரஸ்யில் இணைந்து உள்ளார்.
அவருடன் வேறு யாவரும் காங்கிரஸ் உடன் இணையவில்லை. மேலும் அவர் காங்கிரஸ்யில் இணைந்தது கூட ஊடகத்தின் வாயிலாக தான் அறிந்தோம்.
மேலும், கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சென்னி லதாவின் தூண்டுதல் காரணமாக பி.எஸ்.சரவண குமார் காங்கிரஸ் கட்சியில் இணைந்து இருக்கலாம் என்ற யூகம் இருப்பதாகவும் அவர் அப்போது தெரிவித்தர்.