கோவை: போத்தனுர் அருகே உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தினை ஆக்கிரமித்து காவல்துறை பெண் ஆய்வாளர் வீடு கட்டி வ௫வதாக போத்தனுர் முன்னாள் திமுக கவுன்சிலர் காஜாகான் தெரிவித்துள்ளார்.
கோவை போத்தனூர் கடைவீதி அ௫கே சத்திரம் வீதியில் அரசுக்கு சொந்தமான 31.5 சென்ட் புறம்போக்கு இடம் உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்னாள் அம்மாசை கவுண்டர் என்பவர் இந்த இடத்தை குத்தகை எடுத்து அங்கிருந்த கிணற்று நீரை வியாபாரம் செய்து வந்தார்.
இந்த இடத்தை 15 ஆண்டுகளுக்கு முன்பு குறிச்சி பேருராட்சியாக இ௫க்கும்போது வழக்கு தொடரப்பட்டு இந்த இடம் மீட்கப்பட்டது. இதற்கிடையே அவருடைய மகன் கதிர்வேல் ஏற்கனவே அரசுக்கு சொந்தமான அந்த இடத்தில் 4 சென்டில் வீடு கட்டியுள்ளார். இந்நிலையில் கதிர்வேலின் அக்காவும் காவல்துறை ஆய்வாளருமான விஜயலட்சுமி அதே இடத்தில் 4செனட் இடத்தில் கட்டிடம் கட்டி வ௫கிறார்.
இதுதொடர்பாக திமுக முன்னாள் கவுன்சில் காஜாகான் தகவல் அறியும் உண்மை சட்டத்தின் கீழ் தகவல் பெற்றுள்ளார். அதில் தற்போது காவல்துறை ஆய்வாளர் கட்டி வ௫ம் இடமும் அவருடைய சகோதரர் கட்டப்பட்ட வீட்டின் இடமும் அரசு புறம்போக்கு இடத்தில் இ௫ப்பதாக கூறப்படுகிறது. மேலும், இதற்கு இடையே பல இலட்சம் மதிப்பிலான இந்த இடங்களை அதிகாரிகள் மீட்காத பட்சத்தில் வழக்கு தொடுத்து இந்த இடத்தை மீட்பதாக திமுக முன்னாள் கவுன்சில் காஜாகான் பேட்டியில் தெரிவித்தார்.