கொடூரமாக கொலை செய்த குற்றத்திற்காக வட மாநில இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை குண்டு வெடிப்பு வழக்குகள் அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தவிட்டார்.
கோவை கணபதி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி . அவர் தனது மனைவி ஜோதி மற்றும் மகன் பிரவுடன் வசித்து வந்துள்ளார். ஜோதியுடன் பணிபுரிபவரான பிகார் மாநில இளைஞரான துர்கேஷ் குமார் என்பவரும் 2006ஆம் ஆண்டு முதல் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்தாண்டு ஜனவரி 6ஆம் தேதி பணம் கேட்டு கிருஷ்ண மூர்த்தி மற்றும் துர்கேஷ் குமாரிடையே தகராரு ஏற்பட்டுள்ளது. பின்னர் கிருஷ்ண மூர்த்தி வீடு திரும்பாததையடுத்து அவரை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விசாரனை மேற்கொண்ட காவல்துறையினர், துர்கேஷ் குமார் விரோதம் காரணமாக கிருஷ்ணமூர்த்தியை அரிவாளால் வெட்டி தலையை ஆவாரம்பாளையம் சாக்கடையிலும் உடம்பை சங்கனூர் பள்ளத்திலும் போட்டு கொடூராமாக கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து துர்கேஷ் குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இவ்வழக்கு விசாரனை இன்று கோவை குண்டு வெடிப்பு வழக்குகள் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் கொடூரமாக் கொலை செய்து தடையங்களை மறைத்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை மற்றும் 7 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதித்து நீதிபதி சீனீவாசன் உத்தரவிட்டார்.