ஏப்ரல் 14-ம் தேதி விஜய், சமந்தா எமி ஜாக்சன் நடித்த தெறி திரைப்படம் வெளியாகியது. இந்நிலையில் தெறி பட திருட்டு் சி.டிகள் போத்தனூர் பகுதியில் விற்பனை செய்வதாக விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ரசிகர் மன்ற நிர்வாகிகள் சி.டி க்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் போல கடைக்கு சென்று சி.டிக்களை வாங்கி கையும் களவுமாக கடை ஊழியரை பிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து பிடிபட்ட கடை ஊழியர் நசீர் என்பவரை போத்தனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், நசீரிடம் போலிஸ் விசாரணை நடத்தி, சி.டி.கடையை பூட்டி சாவியையும் எடுத்துச் சென்றனர்.