கோவை மாவட்டத்தில் உள்ள வடவள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி
பெற்ற வங்கி கடனை உடனடியாக திருப்பிச் செலுத்த கூறி அதிகாரிகள் தொல்லை
கொடுத்ததால் விவசாயி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள வடவள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமசாமி. இவர் அரசு வங்கியில் பசுமை குடில் திட்டத்தின் கீழ் ரூ. 70 லட்சம் கடன் வாங்கி உள்ளார்.
இந்நிலையில், ரூ. 6 லட்சம் வங்கியில் திருப்பிச் செலுத்தி உள்ளார். இதனையடுத்து, கடனை திரும்ப செலுத்த கூறி வங்கி அதிகாரிகள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால், மனமுடைந்த விவசாயி, கடனை திரும்ப செலுத்த இயலாததால், நேற்று இரவு பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். அவரது குடும்பத்தார் ராமசாமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளார்.
இருப்பினும், சிகிச்சை பலனின்றி இன்று காலையில் ராமசாமி உயிரிழந்தார். இதுதொடர்பாக, வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.